நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து இன்று சிறந்த ஹீரோவாக கொண்டாபடுபவர் தான் சூரி. இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புசுபாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில், யாரும் கவனிக்காத காதாபாத்திரங்களில் நடித்த இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில், பரோட்டா போட்டியில் கலந்து கொள்ளும் காட்சி இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. ஒரு காமெடியனாக நுழைந்து, இன்று அவர் தனது விடா முயற்சியால் ஹீரோவாக வளர்ந்துள்ளார்.
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானி ஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியன், கிஷோர், போஸ் வெங்கட் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சூரியின் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மைக்கில் பேசிய இளையராஜா, சூரி என்று முதலில் கூப்பிடுகிறார். அதற்கு மக்கள் பெரிய அளவில் கைதட்டவில்லை. உடனே இளையராஜா சூரிக்கு இவ்வளவு தான் ரசிகர்களா என்று கேட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் பலர் கைதட்டி உள்ளனர். உடனே இளையராஜா, நீ கூட்டிட்டு வந்த ஆட்கள் எல்லாரும் இப்பதான் கைதட்டுறாங்க என கூறியுள்ளார். அதற்க்கு சூரி, இங்க இருக்கறவங்க எல்லாரும் என்னுடைய அன்பு தம்பிகள், அண்ணன்மார்கள் தான் சார் என்று சொல்கிறார். அதற்கு இளையராஜா, அப்போ மொதல்ல சூரினு சொன்னப்போ எதுக்கு அவங்க கைதட்டல என்று கேட்டுள்ளார். அப்போது சூரி, நீங்க பேசும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுனு நினைத்து இருப்பாங்க சார் என்று சொல்கிறார்.
உடனே சூரியை பக்கத்தில் கூப்பிட்ட இளையராஜா நீங்க இப்போ எத்தனை படத்தில் கதாநாயகனா நடிக்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு சூரி சார் இரண்டு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு இளையராஜா “உன்னை கதாநாயகனா ஆக்குனதே வெற்றிமாறன் தான்.. நீ காமெடி தானே பண்ணிட்டு இருந்த?நீ கதாநாயகனா நடிக்கிறது காமெடியா? கதாநாயகனா?” என்று கேட்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சூரி, “இதுவும் பதிவு தான் சார்… என் வாழ்நாளில் மறக்க முடியாத பதிவு” என்று கூறியுள்ளார்.
Read more: முகத்தை மூடி தூங்குபவரா நீங்கள்?? உயிரே போகும் அபாயம்!!! உடனே நிறுத்திவிடுங்கள்..