இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ”இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2,977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.