பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான், தனக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான். 49 வயதாகும் ரெஹம் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, நடிகரும், மாடலுமான மிர்ஸா பிலால் பெய் உடன் தனது திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாகவும், மிர்சாவின் பெற்றோர் மற்றும் எனது மகன் முன்னிலையில், மிக அழகாக திருமணம் முடிந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக, நான் நம்பும் ஒரு நபரை கண்டறிந்துவிட்டேன் என்றும் மிர்சாபிலாலை டேக் செய்திருக்கிறார் ரெஹம் கான். அந்த ட்விட்டர் பதிவில், ரெஹம் கான் வெள்ளை திருமண ஆடையில், 36 வயதாகும் மணமகன் பிலாலுடன் ஜொலிக்கிறார். பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த ரெஹம் கான், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 10 மாதங்களில் இருவரும் விவகாரத்துப் பெற்றனர்.