பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இதுவரை 1 கோடியே 75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் நடத்தப்படன. உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கிக் கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, திட்டம் தொடங்கப்பட்டு அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கிக் கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இன்று நடக்கும் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பின்வரும் விஷயங்களை ஆலோசனை செய்ய இருக்கிறார்.
* எத்தனை பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள், அவர்கள் விவரம் என்ன?
* தொடக்க விழா நடத்துவது குறித்து ஆலோசனை?
* நிராகரிக்கப்படும் பெண்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படுவது எப்படி ?
* மாவட்ட அளவில் நடத்தப்படும் தொடக்க விழாக்கள் குறித்த ஆலோசனை?
* ஏடிஎம் கார்டுகளை வழங்குவது, வரக்கூடிய மாதங்களில் எந்த தேதியில் பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசனை?