fbpx

2 1/2 வயது சிறுமியை முட்டித் தள்ளிய காளை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயது குழந்தையை மாடு ஒன்று முட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. குழந்தைகளை பொறுப்பில்லாமல் பொது இடங்களில் விட்டுச் செல்வது பல நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவே அமையும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் உள்ள காந்தி பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமானந்த் காலனியைச் சார்ந்த முதியவர் ஒருவர் இரண்டரை வயது பெண் குழந்தையை சாலையில் விட்டு அருகில் உள்ள இடத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த காளை மாடு ஒன்று பாய்ந்து வந்து குழந்தையை ஆக்ரோஷமாக முட்டி தள்ளியது.

குழந்தையின் பெற்றோர் காளை மாட்டிடம் இருந்து போராடி அதன் அடியில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு தீவிரமான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது. குழந்தையை முட்டித் தூக்கும் அந்த வீடியோ காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்த வீடியோ காட்சிகளை இணையதளத்தில் பரப்பியது யார் என காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். குழந்தைகளை பாதுகாப்பில்லாமல் தனி இடங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் பெற்றோருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் காவல்துறையினர்.

Rupa

Next Post

கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய், தேநீரில் அடங்கிய மருத்துவ பயன்கள் இதோ!...

Sat Mar 11 , 2023
கிராம்பில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கிராம்பும் ஒவ்வொரு நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது. இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக “கிராம்பு” உள்ளது. இது தவிர, இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாகவும் கிராம்பு வலம் வருகிறது. சளி, இருமல், குமட்டல், செரிமானக் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் […]

You May Like