fbpx

ஒடிசா ரயில் விபத்து தமிழர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழு விரைந்துள்ளது…..! 100க்கும் மேற்பட்டவர்களுடன் பேசியுள்ளோம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…..!

ஒரிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தை முன்னிட்டு சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது உரையாற்றிய அவர், ரயில் விபத்து குறித்து முழுமையான விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார். மேலும் 2 அமைச்சர்கள் கொண்ட குழுவும் ஒடிசா சென்றுள்ளது. அதேபோல 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 2 துணை ஆட்சியர்கள், 4 தாசில்தார்கள் கொண்ட அதிகாரிகள் குழுவும் ஒடிசா விரைந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இதுவரையில் 8 பேர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு உள்ளனர். நாங்கள் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த 127 பேருடன் பேசி உள்ளோம் அதேபோல ஹவுரா விரைவு ரயிலில் பயணித்த 5 பேருடனும் உரையாற்றியுள்ளோம். அவர்கள் எல்லோரையும் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

ஒடிசாவில் ரயில் விபத்து பகுதியில் தேடுதல் பணி இன்று மாலை முடிவடையலாம்….! பேரிடர் மீட்பு படை அறிவிப்பு…..!

Sat Jun 3 , 2023
ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் பயணிகள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி இன்று மாலைக்குள் முடிவடையலாம் என தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விபத்து பகுதியில் தொடர்ந்து, மீட்பு பகுதிகள் நடைபெற்று வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. விபத்து பகுதியில் சற்று […]

You May Like