fbpx

நீர்வரத்து அதிகரிப்பு!… ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை!… மாவட்ட நிர்வாகம்!

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பரிசல் இயக்க தடை விதிக்கபட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளில் இருந்தும் கடந்த சில தினங்களாக சுமார் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு சுமார் 4000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கபட்டுள்ளது.

மேலும், காவிரி கரையோரம் உள்ள பொது மக்கள் ஆற்றை கடக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. தமிழ்நாடின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய நதிநீர் ஆணையம் கண்காணித்து வருகின்றது. மேலும், நுழைவு வாயிலில் வருவாய் துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kokila

Next Post

இனி கேஸ் சிலிண்டருடன் மளிகைப் பொருட்களும் வீடு தேடிவரும்!… இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் புதிய திட்டம்!

Thu Aug 17 , 2023
முன்பதிவு செய்தால் கேஸ் சிலிண்டர் போலவே மளிகைப் பொருட்களும் வீடுகளுக்கே விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான், இண்டேன், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்தநிலையில், தற்போதைய நடைமுறையை பொறுத்தவரை சிலிண்டர்களை மொபைல் போனில் முன்பதிவு செய்தால் அடுத்த சில நாட்களில் வீடுகளுக்கே நேரில் வந்து விநியோகம் செய்யப்பட்டு […]

You May Like