இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் 500-ஐ தாண்டியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது அது 500-ஐ தாண்டியுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார்.