fbpx

#Covid-19: நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு தெரியுமா…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,615 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 13,265 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,52,944 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,29,96,427  பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,474 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,99,00,59,536 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,64,038  லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: வரும் 15-ம் தேதி வரை எல்லாம் உஷாரா இருங்க… 65 கி.மீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

Vignesh

Next Post

’அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள்’...! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

Tue Jul 12 , 2022
தனியார் ஆம்புலன்ஸ் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு மேல் வரும்போது மத்திய அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதிக்கு விதிக்கப்படும். மேலும், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதத்திற்கு […]
’அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள்’...! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

You May Like