fbpx

மீண்டும் 17 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை….! மொத்தம் 45 பேர் பலி.‌.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,906 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,447 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,69,850 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,30,118,74 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,519 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,99,12,79,010 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,15,068 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வந்து விபத்தில் சிக்கிய நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்…! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!

Vignesh

Next Post

ஒப்பந்தத்தை கைவிட்ட எலான் மஸ்க்..! சட்டப்போராட்டத்தை கையில் எடுத்த ட்விட்டர்..!

Wed Jul 13 , 2022
டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் ரூ.34 ஆயிரம் கோடிக்கு ட்விட்டரின் பங்குகளை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டிருந்தார். பின்னர், குறுகிய கால இடைவெளிக்குப் பின் ட்விட்டரில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியதால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடர […]

You May Like