fbpx

அச்சத்தில் மக்கள்…! 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,139 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,482 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,89,989 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,30,28,356 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,557  பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,99,27,27,559 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,44,714  லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: “சூப்பர் நியூஸ்” இனி தமிழக அரசு பேருந்தில் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

Vignesh

Next Post

’வரி பாக்கி வைத்திருந்த பிரபல மருத்துவமனைக்கு எச்சரிக்கை பேனர்’..! மாநகராட்சி நடவடிக்கை..!

Thu Jul 14 , 2022
அண்ணாநகரில் வரி பாக்கி வைத்திருந்த மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் முறையாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி அந்த கட்டிடங்களில் சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவிப்பு பேனர் வைத்து எச்சரிக்கை […]

You May Like