fbpx

Flash: 18,930 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு…! 35 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,930 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,650 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,35,47,809 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,29,21,977 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,305 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,98,33,18,772  கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,44,489  லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: நல்ல சான்ஸ்… TET தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு பயற்சி வழங்கப்படும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு…!

Vignesh

Next Post

பஞ்சாப் முதல்வருக்கு 2ஆம் திருமணம்..! மருத்துவரை மணக்கிறார் பகவந்த் மான்..!

Thu Jul 7 , 2022
ஏற்கனவே திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இன்று இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர்தான் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி சீரத், தில்ஷன் என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 […]

You May Like