fbpx

ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு..! மத்திய சுகாதாரத்துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,678 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,629 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,39,329 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,29,83,162 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,454 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,98,88,77,537 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,44,145 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: தமிழகமே… உச்சகட்ட பரபரப்பில் அதிமுக தலைமை… இன்று 9 மணிக்கு தீர்ப்பு…! வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு…!

Vignesh

Next Post

'நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா' என்ற விதி ரத்து.. இடைக்கால பொதுச்செயலாளரானார் இபிஎஸ்...

Mon Jul 11 , 2022
அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. பொன்னையன்.அதிமுக செயற்குழுவில் 16 வரைவு தீர்மானங்களை வாசித்தார்.. அதிமுக செயற்குழு, பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு […]
’எடப்பாடியிடம் ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!

You May Like