fbpx

இந்தியாவில் குறைந்தது தினசரி கொரோனா… பலி எண்ணிக்கை மட்டும் 24 மணி நேரத்தில் 51 பேர்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,935 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 51 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,069 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,37,67,534  கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,30,97,510 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,709 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,00,04,61,095 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,46,671 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

Vignesh

Next Post

முதல் சதம் விளாசிய ரிஷப் பண்ட்..! ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா..!

Mon Jul 18 , 2022
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்திருந்தார். ஹார்திக் பாண்டியா […]
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு..!! அணிக்குள் நுழைந்த இளம் வீரர்..!! இந்தியாவின் ஆட்டம் இன்று எப்படி இருக்கும்..?

You May Like