fbpx

போரில் போராடிய பாலஸ்தீனத்திற்கு உதவிய இந்தியா!. முதல் தவணையாக 25 லட்சம் டாலர்கள் அனுப்பியது!

India-Palestine: பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்காக 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு (UNRWA) முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது. காஸாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு இந்த ஆண்டு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது.

இந்திய அரசாங்கம் 2023-24 ஆம் ஆண்டிற்கான 35 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது, இது அகதிகளுக்கான சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில், நியூயார்க்கில் நடைபெற்ற UNRWA மாநாட்டில், 2024-25ல் பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்திருந்தது. நிதியுதவிக்காக வழங்கப்படும் தொகை நேரடியாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்படாமல் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையிடம் ஒப்படைக்கப்படைத்தது. இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போரில் குறைந்தது 38,664 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பலஸ்தீன விவகாரங்களுக்கு ஆதரவைப் பெறுவதில் இந்தியா எப்போதும் தீவிரப் பங்காற்றுகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ளதால், இஸ்ரேலுடன் அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் இந்தியா தனது ஆதரவைத் தொடர்கிறது. பிரதமர் நரேந்திர மோடி 10 பிப்ரவரி 2018 அன்று பாலஸ்தீனத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் செய்தார், இது அக்டோபர் 2015 இல் பாலஸ்தீனத்திற்கு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: அதிர்ச்சி!. கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை?. சங்கராச்சாரியார் பகிரங்க குற்றச்சாட்டு!.

English Summary

India helped Palestine who fought in the war! Sent 25 lakh dollars as first installment!”

Kokila

Next Post

தென்கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை..!! வடகொரியாவில் அதிரவைக்கும் சம்பவம்..!!

Tue Jul 16 , 2024
North Korea executes 30 teens for watching South Korean TV shows

You May Like