fbpx

நிலவில் பொறிக்கப்படும் இந்திய கொடி, இஸ்ரோவின் லோகோ..!! எப்படி இது நடக்கும்..? சுவாரஸ்ய தகவல்கள்..!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம், கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, விண்ணில் செலுத்தியது. சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்க, விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பின் சிக்னலை பெற மட்டுமே முடியும். முறையாக சிக்னலை வேகமாக அனுப்ப முடியாது. இதற்கு ஆர்பிட்டர் தேவை. அதற்காக முன்னதாக அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் உடன் விக்ரம் இணைந்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது முக்கியமான தகவலை பூமிக்கு அனுப்பவும், தொலைத்தொடர்பு ரீதியாக விக்ரம் லேண்டருக்கு உதவவும் இந்த ஆர்பிட்டர் உதவியாக இருக்கும்.

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கிய பின், விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடையும். பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கும். பின்னர் பிரக்யான் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்படவுள்ளன. பிரக்யான் வெளியே வந்து, லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வரும். இதனால் பிரக்யான் உருளும் போது, ​​சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து, இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவின் ஈர்ப்பு விசை குறைவு மற்றும் அடர்த்தியால் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரை அப்படியே பல ஆயிரம் ஆண்டுகள் கூட இருக்கும். இந்தியா அங்கே சென்றதற்கான அடையாளமாகவும் இது இருக்கும்.

Chella

Next Post

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை -சுற்றுலாத்துறை அறிவிப்பு

Wed Aug 23 , 2023
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது பட்டாசுக்கள் தான் அதன் பிறகு தான் எல்லாமே. சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தீவுத்திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை குறித்து அறிவிப்பை சுற்றுலாத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி […]

You May Like