fbpx

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு..!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தற்போது சுனில் சேத்ரி பதவி வகித்து வருகிறார். கடந்த 1984ம் ஆண்டு தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த சுனில் சேத்ரி, கடந்த 2002ம் ஆண்டு முதல், தொழில்முறை ரீதியிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள சுனில் சேத்ரி, உலகளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த தனது முடிவை அறிவித்துள்ளார். ஜூன் 6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான பிபா கால்பந்து தகுதி போட்டியுடன் சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை சுனில் சேத்ரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “தான் ஒருபோதும் மறக்க முடியாத நாள் ஒன்று இருப்பதாக்வும் அதை நாட்டுக்காக முதன் முதலில் விளையாடிய நாளை நினைவு கூறுவதாகவும் சுனில் சேத்ரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தனது முதல் பயிற்சியாளர் சுகி உள்ளிட்டோர் குறித்து அந்த வீடியோவில் பகிர்ந்துள்ள சுனில் சேத்ரி தனது முதல் ஜெர்சி, முதல் கோல் என ஒவ்வொன்றையும் தனித் தனியாக விவரித்து உள்ளார். தனது கால்பந்து அனுபவங்கள் குறித்து ஏறத்தாழ 10 நிமிடங்களுக்கு வீடியோவாக பேசி சுனில் சேத்ரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More ; ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அவமானம் இல்லை….. பெருமை மட்டுமே என தெரிவித்த பிரபலம்….

Next Post

'கூட்டமே இல்ல’..!! நாளை முதல் 2 வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு..!!

Thu May 16 , 2024
திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சினிமா துறையில் இருக்கும் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அந்தவகையில், விஜய்யின் கில்லி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில், பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு […]

You May Like