fbpx

#Flash: அதிகரித்து வரும் கொரோனா… ஒரே நாளில் 16 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,103 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 31 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 13,929 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,35,02,429 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,28,65,519 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,199 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,97,95,72,963  கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,10,652 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ அமைக்க கூடுதலாக 20 சதவீத மானியம்…! உடனே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்…!

Vignesh

Next Post

’செல்போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்’..! சொல்கிறார் செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர்..!

Sun Jul 3 , 2022
செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதன்முதலில் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. பணப் பரிவர்த்தனை முதல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது வரை ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் இன்று மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம் ஆகியிருக்கிறது. இந்நிலையில், உலகின் முதல் செல்போனை […]
’செல்போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்’..! சொல்கிறார் செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர்..!

You May Like