fbpx

இந்திய அஞ்சல் துறையில் வேலை…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்….!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Motor Vehicle Mechanic பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஒரு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

விண்ணப்பதாரர் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிக்கு ஏற்ற படி ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_12122023_MMSBhopal_English.pdf

Vignesh

Next Post

நரம்பு ஊசி மருந்துக்கு பதில் தண்ணீரை ஏற்றிய நர்ஸ்!… அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் பலி!… அதிரவைக்கும் பின்னணி!

Wed Jan 10 , 2024
நியூயார்க்கில் செவிலியர் ஒருவர் பாட்டில்களில் நரம்பு ஊசி மருந்துக்கு பதிலாக தண்ணீரை ஏற்றி சிகிச்சையளித்ததால் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் அஸாண்டே ரோஹ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாதாரண நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள், அடுத்த சில தினங்களில் திடீரென உயிரிழந்தனர். ஆனால், இதற்கு நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம் […]

You May Like