இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விவரங்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல 202-23 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை கடந்து 7.2% வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முக்கியத்துறைகளாக கருதப்பட்டு வரும் விவசாயம், நிதி, சேவை மற்றும் வர்த்தகத் துறைகளில் இந்தியா சென்ற வருடம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
ஆதார் அடிப்படையில் விவசாயம் 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், நிதித்துறை 4.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகவும் வர்த்தகம், சேவை மற்றும் தொலைத் தொடர்பு துறை 14 சதவீதம் வளர்ச்சி பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.