fbpx

இந்தியாவின் அடுத்த நிலவு பயணம்!… சந்திரயான்-4 அப்டேட்!

Chandrayaan-4: இந்திய விண்வெளி நிறுவனமான ISRO, தனது அடுத்த நிலவு பயணமான சந்திரயான்-4க்கு தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரோவின் முயற்சியால் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சாதனை படைத்தது. இதையடுத்து சந்திரயான்-4 தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-4 தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் எனவும் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா) அழைக்கப்படும் என கூறியுள்ளார்.

சந்திரயானின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும். அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியே வரும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேமித்து, பூமிக்கு அனுப்பும் என கூறியுள்ளார்.

மேலும் சந்திரயான்-4 (Chandrayaan-4) தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சந்திரயான் 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Readmore: ”எல்லாம் Election முடியுற வரைக்கும்தான்”..!! பொதுமக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!

Kokila

Next Post

இன்று 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

Sat Apr 13 , 2024
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் ஓரளவு தணிந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அடுத்த 7 நாட்களை பொறுத்தவரை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல, […]

You May Like