fbpx

அதிகாரப்பூர்வ அறிவிப்பு…! 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்…

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. டிச.27-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை தேர்வு கட்டணத்துடன் மேல்நிலை வகுப்புக்கு ரூ.1,000, 10-ம் வகுப்புக்கு ரூ.500 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 27.12.2023 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். டிச. 31, ஜனவரி 1, ஜனவரி 7 ஆகிய நாட்கள் நீங்கலாக இடைப்பட்ட தேதிகளில் அரசு தேர்வுகள் துறை சார்பில் மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு காலை 11 முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள், ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 500 ஆன்லைனில் தட்கல் முறையில் செலுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மைய விவரங்கள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தகுதிகளை www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

தீராத வயிற்றுப்புண் குணமாகனுமா.? இதே போல் தேங்காய் பால் கஞ்சி செஞ்சி சாப்பிட்டு பாருங்க.!

Sat Dec 23 , 2023
தேங்காய் பால் கஞ்சி வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். இந்தக் கஞ்சி வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் கொடுக்கிறது. இந்த கஞ்சி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம். தேங்காய் பால் கஞ்சி செய்வதற்கு 1 கப் பச்சரிசி, 2 கப் தண்ணீர், 1 தேங்காய், 5 பல் பூண்டு மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை […]

You May Like