கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் அடிமாலி பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்று முன் தினம் வீட்டில் இருந்து மாயமானார். அவரை காணாது திகைத்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த சிறுமியை கோதமங்கலம் பகுதியில் கண்டுபிடித்தனர்.
பின்னர் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஜார்ஜ் என்ற இளைஞர் தன்னை வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். மேலும் ஒரே வருடத்தில் இரண்டு முறை வேறு இரு நபர்களாலும், தான் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் ஜார்ஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அடிமாலி காவல் நிலையத்தின் அதிகாரிகள், அவரை கைது செய்தனர். ரஞ்சித், இன்ஸ்டாகிராம் மூலம் அந்த 14 வயது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி, அவரைக் கூட்டிச்சென்று வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த சிறுமியை முன்பு வன்புணர்வு செய்து தலைமறைவாகிய இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.