fbpx

5,600 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல்.. மூளையாக செயல்பட்ட துஷார் கோயல் யார்? பாஜக-வின் குற்றசாட்டும் காங்கிரஸ் விளக்கமும்..

டெல்லியில் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் இதுவாகும். காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்த போதை பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து குற்ற சாட்டை முன்வைக்கிறது. ஆனால் இந்த குற்றசாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்மை என்ன என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த போதை பொருள் விவகாரம் குறித்து இங்கே பார்க்கலாம்.

தெற்கு டெல்லியின் மஹிபால்பூர் விரிவாக்கப் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பதுக்கல் பறிமுதல் செய்யப்பட்டது. 560 கிலோ கொக்கெய்ன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் நடத்தப்பட்ட விசாரணையில், துஷார் கோயல் இந்த போதைப்பொருள் கும்பலின் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. கோயல் டெல்லி காங்கிரஸ் இளைஞரணி தலைவராக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் போதைப்பொருள் மார்பியா மற்றும் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் இளைஞர்களை போதைப் பொருளுக்குள் தள்ளுவதாகவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் பாஜக ஒரு அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரசுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா?

இந்த விவகாரத்தில் பாஜக எழுப்பியுள்ள மிகப்பெரிய கேள்வி, காங்கிரஸ் கட்சியுடனான கோயலின் உறவை பற்றியே உள்ளது. கட்சியில் கோயலின் பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக கோரி வருகிறது. 2022 ஆம் ஆண்டு டெல்லி காங்கிரஸின் ஐடி செல் தலைவராக கோயல் இருந்ததை சுட்டிக்காட்டி, முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் கோயல் இருக்கும் புகைப்படங்களையும் பாஜக வெளியிட்டது.

காங்கிரஸ் விளக்கம் : காங்கிரஸ் கட்சிக்கும் துஷார் கோயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. பாஜகவின் குற்றச்சாட்டுகள் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். சர்வதேச போதைப்பொருள் சிண்டிகேட்டில் கோயலின் தொடர்பு குறித்து டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவின் கீழ் விசாரணை தொடர்கிறது.

போலீசார் அளித்த தகவலின் படி, கோயலுக்கு மத்திய கிழக்கு நாடுகளுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது மற்றும் இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும், அவருக்கு காங்கிரசுடன் தொடர்பு இருப்பது நிரூபணமானால், வரும் சட்டசபை தேர்தல் உட்பட, இனி வரும் தேர்தல்களில் காங்கிரசை தற்காப்பு நிலைக்கு தள்ளும் சூழல் உருவாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பெருகிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியின் போது போதைப்பொருள் கைப்பற்றுவதில் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய அமித் ஷா, போதைப்பொருள் அச்சுறுத்தலைச் சமாளிக்க பாஜக அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். அவரது கருத்துக்களும், தற்போதைய விசாரணையும் காங்கிரஸின் மீதான அரசியல் தாக்குதலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

Read more ; ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் கேன்சர்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியமா இருக்காதீங்க..

English Summary

Investigative Report: The ₹5,600 Crore Drug Bust – A Political Storm Brewing Around Congress

Next Post

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!! நவம்பர் 7ஆம் தேதியே கடைசி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Tue Oct 8 , 2024
Employment in ration shops..!! November 7th is the last..!! Notification released by Tamil Nadu Govt..!!

You May Like