இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ குறித்து பேசிய அவர், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதும், ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிமுகப்படுத்தப்படும் என்றார். சத்தீஸ்கரில் உள்ள கைராகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர்; அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் நக்சலிசத்தின் அச்சுறுத்தலை அகற்ற மோடிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.
தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக அம்பேத்கர் ஆற்றிய பணிகளுக்காக ஒட்டுமொத்த தேசமும் அவரை நினைவு கூர்கிறது. உருவாக்கிய அரசியல் சாசனத்தின் உணர்வை அடித்தட்டு மக்களுக்கு எடுத்துச் செல்ல மக்கள் உழைக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நாளிலும் காங்கிரஸ் பொய்களைப் பரப்புவதில் மும்முரமாக உள்ளது” என்று கூறினார்.
மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகிறார், மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று ஷா கூறினார். பாஜக அரசியலில் இருக்கும் வரை, இடஒதுக்கீட்டிற்கு எதுவும் நடக்க விடமாட்டோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் பொய் வியாபாரம் செய்து வருகின்றனர்” என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.