fbpx

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் இவரா..? வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நேற்று ஜூலை 31ஆம் தேதி வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா? அல்லது அவருக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவியது. இதற்கிடையே, அண்மையில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சில அமைச்சர்களை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெறவுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க இருப்பதாகவும் இதனால், அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்கலாம் நிறைவு பெற்ற நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் தொடர்பான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் அவரே ஆளுநராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை..!! நீர்வரத்து 1.70 லட்சம் கன அடியாக அதிகரிப்பு..!!

English Summary

RN Ravi’s tenure as the Governor of Tamil Nadu ends on Thursday, July 31.

Chella

Next Post

Gold Rate | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Thu Aug 1 , 2024
As of today, the price of 22 carat jewelery gold in Chennai has gone up by Rs 80 to Rs 51,440 per bar.

You May Like