ஒருவருடைய வீட்டில் புறா மற்ற பறவைகள் என பறவை நமக்கு பல்வேறு சமயத்தில் இடையூறாக இருக்கும். இதன் காரணமாக, பறவைகள் மீது நாம் கடும் கோபம் கொள்வோம்.
ஆனால், இந்த பறவைகள் வீட்டில் வீடு கட்டுவது நமக்கு நல்லதா? கெட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை. அது பற்றிய தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பறவைகள் என்றாலே தெய்வீகமானது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனெனில் நாம் வணங்கும் பல தெய்வங்கள் பறவைகளை தான் வாகனமாக கொண்டுள்ளது. ஆகவே பறவைகளை ஒருபோதும் நாம் எதிரிகளாக நினைக்கக் கூடாது. அதேபோல அவை நம்முடைய இடத்தில் வந்து கூடு கட்டினால், அதனை நாம் அழிக்கவும் நினைக்க கூடாது. இது ஒரு தெய்வீக காரியமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது பறவைகள் ஒரு இடத்தில் வந்து கூடு கட்டுவது ஒரு தெய்வீக செயல் என்று கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக புறா லட்சுமி தேவிக்கு உகந்த பறவை என்று கருதப்படுகிறது. ஆகவே, வீடுகளில் புறாக்களை வளர்ப்பது நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்றளவும் வீடுகளில் புறாக்களை வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் சாஸ்திரம் இதனை பொய் என்று சொல்கிறது.
புறாக்கள் என்பது நம்முடைய வீட்டிற்கு வரும் துர்திஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. ஆகவே புறாக்களை நம்முடைய வீட்டில் வளர்ப்பது நமக்கு நன்மை பயக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே பறவைகள், நம்முடைய வீட்டிலோ அல்லது நம்முடைய இடத்தில் வீடு கட்டுவது மங்களகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. நம்முடைய இடத்தில் அல்லது நாம் தங்கி இருக்கும் இடத்தில் பறவைகள் கூடு கட்டினால், அதனை எந்த காரணத்தை முன்வைத்தும் அழிக்க நினைக்க கூடாது என்று கூறப்படுகிறது.