பொதுவாக உடலுறவு என்றால் இன்றைய காலகட்டத்தில் இரவு நேரத்தை மட்டுமே அதற்கான சமயமாக பலரும் கருதுகிறார்கள். ஏனென்றால், இரவில் மட்டுமே அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, சற்று ஓய்வாக இருக்கிறார்கள். ஆகவே அப்போது உடலுறவு வைத்துக் கொள்வதையே மனிதர்கள் வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
ஆனால், இரவு நேரம் என்பது ஓய்வில் இருப்பதற்கான நேரம் தான். அதே சமயம், அப்போது தான் தங்களுடைய மனைவியுடன் அமைதியாக அமர்ந்து எந்த வித டென்ஷனும் இல்லாமல் பேசி, ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
இது ஒரு புறம் இருந்தாலும், இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதை விட, அதிகாலை வேளையில் உடலுறவு வைத்துக் கொண்டால், நமக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாலை வேளையில் உடலுறவு வைத்துக் கொண்டால், புத்துணர்ச்சி ஏற்படும் என்றும், ஆண், பெண் உள்ளிட்ட இருவருமே நன்றாக செயல்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இது நாம் படிப்பதற்கு வேண்டுமானால், நன்றாக இருக்கலாம். இது அனைவரின் வாழ்விலும் நிச்சயமாக ஒத்து வருவதற்கான வாய்ப்பில்லை. காலையில் எழுந்தவுடன் அன்றாட பணிகள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற சுழற்சி முறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக இது சாத்தியப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
ஆனால் அதிகாலை வேளையில், உடலுறவு வைத்துக் கொண்டால், விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் இல்லை என்று நினைப்பவர்கள் நிச்சயமாக இந்த அதிகாலை வேளையில் உடலுறவு வைத்துக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
அதே சமயம், இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதை விட, அதிகாலை வேளையிலும் பகல் நேரத்திலும் உடலுறவு வைத்துக் கொள்வது நமக்கு அதிக இன்பத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. உடலுறவு என்பது, எப்போதும் தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யத்தை அதிகரித்து, மனதில் இருக்கின்ற நெருக்கத்தை போக்கி, அவர்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.