fbpx

நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில் தான் உள்ளதா..? வெளியான பரபரப்பு தகவல்..!

நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல. நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை.

No animosity towards Governor Ravi, says Tamil Nadu CM Stalin | Deccan  Herald

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுநர் மாளிகை தெரிவித்ததாக மே 4ஆம் தேதி முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழக மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தமிழக மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம்.. அரசு அதிரடி அறிவிப்பு..

Wed Jul 13 , 2022
விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் சாமானிய மக்களுக்கு பெரும் நிவாரணமாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவச எல்பிஜி சிலிண்டர்களை அரசு அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் ஒரு வருடத்தில் 3 எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரகாண்ட் அரசு இந்த ஆண்டு மே மாதம் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க முடிவு செய்தது. இலவச எல்பிஜி சிலிண்டர் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.55 கோடியை மாநில அரசு […]
சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! ’ஒரு மாதத்திற்கு 2.. ஆண்டுக்கு 15’..!! வெளியான அறிவிப்பு..!!

You May Like