மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வசூல் பேட்டை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் வடிவேலுவை சாதி ரீதியாக ஒடுக்கி வைக்கும் மாவட்டச் செயலாளர் கதாபாத்திரத்தில் பகத் பாஸில் நடித்திருக்கிறார். இதற்கு நடுவே தனவால் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது சேலத்தில் மாவட்ட செயலாளராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திரைப்படத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை இணைத்தும் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய நிலையில்தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இந்த திரைப்படம் உண்மை கதை என்று சொல்கிறார்களே, என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த அவர் நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை.
அதனால் அது பற்றி நான் கருத்து கூற இயலாது. அவர்கள் வேறு இயக்கம், நாங்கள் வேறு இயக்கம் எங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் அந்த திரைப்படத்தை வந்து பார்த்திருப்பேன். நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்து விட்டார்.