பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, தங்கள் பாலியல் கற்பனையை விவரிக்கும் படி கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவரின் மின்னஞ்சல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள யூஜினில் சர்ச்சில் என்ற உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், மார்ச் 13ம் தேதி அன்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, மாணவர்கள் தங்களின் பாலியல் கற்பனையை விவரிக்கும் படி கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று ஆசிரியர் ஒருவர் மின்னஞ்சல் (ட்விட்டர்) அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சல் பதிவில், உடலுறவை பற்றி வெளிப்படையாக எழுதக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
இந்தக் கதை ஒரு பாலியல் கற்பனையாகும். இதில் எந்த வகையான உடலுறவு பற்றி வெளிப்படையாக இருக்கக் கூடாது. உங்கள் கதையில் பயன்படுத்த 3 பொருட்களை (காதல் இசை, மெழுகுவர்த்திகள், மசாஜ் எண்ணெய், இறகு, சுவையூட்டப்பட்ட சிரப் போன்றவை) தேர்வு செய்யவேண்டும். உடலுறவு கொள்ளாமலேயே நீங்கள் அன்பான உடல் பாசத்தைக் காட்டவும் பெறவும் முடியும் என்பதை உங்கள் கதை காட்ட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் நிலையில், இதனை ஏறக்குறைய 5.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இருப்பினும், இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.