fbpx

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு இவ்வளவு அபராதமா?…. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் தற்போது பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சியினால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அது போலவே பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகளை குறிக்கும் வண்ண ஓவியங்களும் வரையப்படுகின்றன.

அந்தவகையில் சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு ரூ.8 லட்சத்து 39 ஆயிரத்து 520 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கட்டுமானக் கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்து 810 ரூபாயும், விதிகளை மீறி போஸ்டர் ஒட்டிய 211 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், சுவரொட்டிகளை ஒட்டுவது போன்றவற்றை பொதுமக்கள் தவிர்த்து மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் இவற்றை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

மனைவியை துடிக்க துடிக்க கொன்று கிணற்றில் வீசிய கணவன்; சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்..!

Tue Sep 6 , 2022
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பெரிய தெருவில் வசித்து வருபவர் ராமு (40). இவரது மனைவி சரிதா (27). இருவரும் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் பெருமுகையில்  இருக்கும் தனியார் லெதர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி சரிதா வீட்டிலிருந்து திடீரென […]

You May Like