fbpx

என்னது தமிழக ரேஷன் கடைகளில் இனிமேல் இது கிடையாதா……? வெளியான அதிர்ச்சி செய்தி…..!

நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலும் பருத்திப்பதுக்கலை தடுக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றின் கொள்முதல் நாட்டில் குறைந்திருப்பதால் அதன் விலை அதிகரித்து இருக்கிறது.

இத்தகைய நிலையில் தான் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களில் இருக்கும் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தான் தமிழக ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கான அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகின்ற நிலையில், மற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்திய உணவுக் கழகத்திடமிருந்து தமிழக நுகர்வோர் வாணிப கழகம் வாங்குகிறது. இதற்கு நடுவே திடீரென்று அரிசி மற்றும் பருப்பு விநியோகத்தை அரசு நிறுத்தி இருப்பதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இருந்தாலும் இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் விவசாயிகளிடமிருந்து 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. 7.50 லட்சம் டன் அரிசி இருப்பில் உள்ளது. அதனால் மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்தி அரிசி விற்பனையை நிறுத்தினாலும் தமிழக ரேஷன் விநியோகத்தில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Post

18 வருஷம் ஆச்சு..!! சொத்தில் பங்கு கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டிய கணவன்..!! பீதியில் பொதுமக்கள்..!!

Tue Jun 27 , 2023
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுா தாலுகா திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே, சீனிவாஸ், மனைவி சவிதாவிடம் விவாகரத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், குடும்ப சொத்து விவகாரம் […]

You May Like