fbpx

’ஆட்டோகிராப்’ திரைப்பட நடிகையா இது..? கோபிகாவின் தற்போதைய நிலைமையை பாருங்க..!!

ஆட்டோகிராப் திரைப்படத்தில் நாயகியாக வந்த கோபிகாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமா மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் கோபிகா. இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சேரன் இயக்கத்தில் வெளியான “ஆட்டோகிராப்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்றார்.

கவர்ச்சியை காட்டி வாய்ப்பு கேட்கும் நடிகைகளில் இருந்த காலத்தில் தனக்கென ஒரு எல்லை வைத்து நடித்தவர் தான் கோபிகா. இவர், கடந்த 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகினார்.

சினிமாவிலிருந்து விலகிய பின்னர் எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காத கோபிகா, தற்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் பொழுது, “இது கோபிகாவா?” என திகைக்க வைக்கின்றது.

Chella

Next Post

நாளை மறுநாள் உருவாகிறது ”மிக்ஜாம் புயல்”..!! தமிழகத்தை நோக்கி நகரும் என எச்சரிக்கை..!!

Thu Nov 30 , 2023
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

You May Like