fbpx

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கே இந்த நிலைமையா..? வாக்காளர் அட்டை தொலைஞ்சு போச்சாம்..!!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இவருக்கான அடையாள அட்டையை மத்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்நிலையில், அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதனை டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். அதற்காக அடையாள அட்டையை தனது உதவியாளர் சரவணன் என்பவர் மூலம் தபால் மூலம் அனுப்புவதற்காக உத்தரவிட்டதாக தெரிகிறது.

அதன்படி, சரவணன் தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையை தபால் நிலையம் எடுத்து சென்ற போது அங்கே தவறிவிட்டுள்ளார். இதையடுத்து, உதவியாளர் சரவணன் அடையாள அட்டை மாயமானது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் தேர்தல் அடையாள அட்டையே தொலைந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

முதல்வர் மம்தா பானர்ஜியை அறையுங்கள்!… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

Wed Jan 31 , 2024
முதல்வர் மம்தா பானர்ஜியை மக்கள் அறைய வேண்டும் என பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் பேசிய மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார், “உங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபின், அவர்களால் பாடம் குறித்த எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. அதற்காக நீங்கள் அவர்களை அறைந்து ‘பள்ளிகளில் என்ன […]

You May Like