வீட்டில் உள்ள விளக்குகள், ஃபேன் ஆகியவற்றை ஆன் செய்யவும், அணைப்பதற்கும் நாம் அடிக்கடி சுவிட்ச்போர்டை தொடுகிறோம். இதனால் அது விரைவில் அழுக்காகி விடுகிறது. இதன் காரணமாக அதில் நிறைய பாக்டீரியாக்களும் இருக்கும். ஆனால், சுவிட்சு போர்டை எந்தவித பாதுகாப்பும் இன்றி சுத்தம் செய்வது ஆபத்தானதாகும். ஏனெனில், அது மின்சாரம் சம்பந்தப்பட்டது. தண்ணீர் அல்லது எந்த ரசாயனங்களையும் சுவிட்சு போர்டில் எளிதில் பயன்படுத்த முடியாது. இதனால், பலரும் தங்கள் வீட்டில் உள்ள சுவிட்சு போர்டை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கின்றனர்.
ஆனால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், இந்த சுவிட்ச்போர்டை எளிதாக சுத்தம் செய்யலாம். அதற்கு முதலில் வீட்டிற்கு மின்சாரம் செல்லும் மெயின் பவரை ஆஃப் செய்ய வேண்டும். பின்னர், சுத்தம் செய்த 40 நிமிடங்களுக்கு பின்னர், மெயின் பவரை இயக்கவும். சுவிட்ச் போர்டை வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே சுத்தம் செய்ய முடியும்.
பேக்கிங் சோடா : சுவிட்ச் போர்டை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா சிறந்த சுத்தப்படுத்தியாகும். பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து தடிமனான பேஸ்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், இதை ஒரு பிரஷின் உதவியுடன் சுவிட்ச்போர்டில் தடவி சிறிது நேரம் கழித்து உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். பேக்கிங் சோடாவுக்கு பதில் உப்பு மற்றும் எலுமிச்சை பேஸ்டையும் பயன்படுத்தலாம்.
டூத்பேஸ்ட், ஷேவிங் கிரீம் : பற்பசையில் ப்ளீச்சிங் பண்புகள் அதிகம் உள்ளதால், சுவிட்ச் போர்டை வெண்மையாக்க இவை பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால், ஷேவிங் கிரீம் கூட பயன்படுத்தலாம். சுவிட்ச்போர்டில் 5 நிமிடங்கள் தடவிய பிறகு பருத்தி துணியால் துடைக்க வேண்டும். இப்போது, பளிச்சென்ற சுவிட்ச் போர்டு தயார்.
நெயில் பாலிஷ் ரிமூவர் : இது அனைத்து வகையான கறைகளையும் சுத்தம் செய்யும். தீ விபத்துகளைத் தவிர்க்க இதை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். பருத்தி துணியை பந்து போல் செய்து, அதை நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்து சுவிட்ச்போர்டை சுத்தம் செய்தால், பளிச்சென மாறும்.
தக்காளி சாஸ் : தக்காளி சாஸில் கறைகளை நீக்கக்கூடிய ரசாயனங்கள் உள்ளது. எனவே, சாஸை சுவிட்ச்போர்டில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின்னர், லேசாக ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், சுவிட்சு போர்டு பளபளக்கும்.
Read More : வெறும் 5 ஆண்டுகள்..!! வட்டி மட்டுமே ரூ.4.50 லட்சம் கிடைக்கும்..!! ரூ.1,000 கூட முதலீடு செய்யலாம்..!! போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!!