Israel-Hamas War | இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காசா மீது நேற்றிரவு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் 70 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள அகதிகள் முகாம் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவில் இதுவரை 29,000 பேர் உயிரிழந்தனர்.