Israel Attack: வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் நீடிக்கும் நிலையில், ஹமாசுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனான், ஈரான், ஈராக் நாடுகளை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதால், போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. காசா பகுதிகளில் வான் வழி தாக்குதலை தொடர்ந்து தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வௌியேறும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் இஸ்ரேலிய தாக்குதலால், பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாகவும், ஆம்புலன்ஸ்கள் கூட பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றும் கூறியது.
லெபனானில் உள்ள சுமார் 175 இலக்குகளைத் தாக்கியது. வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகரில் இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கான பாலஸ்தீனிய பொதுமக்கள் (குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட) கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வடக்கு காசாவில் 16 நாள் இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்கு மத்தியில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து இன்றி தவித்து வருகின்றனர்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் Beit Lahiya நகரில் குடியிருப்புத் தொகுதியை குண்டுவீசித் தாக்கியதில் சுமார் 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் சமீபத்திய சம்பவம் இதுவாகும்.
சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர், இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் காசா பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளால் அப்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளதால், அவசர ஊர்தி வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெய்ட் லஹியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைதி செயல்முறைக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் தோர் வென்னஸ்லேன்ட் கூறியதாவது, பல வாரங்களாக தீவிரப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையால், ஏராளமான மக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல், வடக்குப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
Readmore: ஒரு ஏக்கருக்கு ரூ.5,500 மானியம்… விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு… உடனே விண்ணப்பிக்கவும்