fbpx

#TnGovt: மாணவர்களே கவனம்… வரும் 25-ம் தேதி தான் கடைசி நாள்…! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்… இல்லை என்றால் சிக்கல்…!

11- ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகலிற்கு விண்ணப்பம் செய்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11- ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலை இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 21 ந் தேதி மதியம் 12 மணி முதல் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: 12-ம் வகுப்பு மாணவர்களே துணைத்தேர்வுக்கு… ஆன்லைன் மூலம் இன்று முதல் Hall Ticket…! எப்படி டவுன்லோட் செய்வது…?

Vignesh

Next Post

எல்லாம் உஷாரா இருங்க... இந்த 13 மாவட்டங்களில் கனமழை..‌‌.! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை...!

Wed Jul 20 , 2022
தமிழகத்தில் திருப்பத்தூர், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like