ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை தலைவர் தினேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மங்களகரமான நாட்களில் அசையா சொத்துகள் குறித்த ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை (நாளை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆவணப் பதிவு மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே, காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை பதிவு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்று மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு, விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.