பத்திர பதிவிற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்குவது வழக்கம். ஆனால் இந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப் பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் மட்டும் பத்திரப் பதிவிற்கு ரூ. 1000 வசூலிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என தமிழக பத்திரப் பதிவு துறை அறிவித்துள்ளது. அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி வழக்கம் போல் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். ஆனால் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பத்திர பதிவுக்கு பொதுமக்களிடம் பல இடங்களில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட பொதுமக்கள் இனி பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ; ‘மாணவர்களின் திசைகாட்டி..’ ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்..!!