fbpx

#TRB: தேர்வர்களே கவனம்… வரும் 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மட்டும்…! ஆசிரியர் தேர்வாணையம் மிக முக்கிய அறிவிப்பு…!

பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2017-2018-ம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11-ம்  தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விவரஙகள சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதல் கட்டமாக Textile Technology, Production Engineering, உள்ளிட்ட பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள, வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நாளை நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பணித் தேர்விற்கு நேர்காணல் எதுவும் கிடையாது.இந்தப் பணிக்கு போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் , கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவச் சான்றின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

Also Read: இந்தியாவில் ஆட்டத்தை தொடங்கிய குரங்கு அம்மை… 3,413 பேர் இது வரை பாதிப்பு…! எல்லாம் உஷரா இருங்க… மத்திய அரசு போட்ட உத்தரவு…!

Vignesh

Next Post

நாளை நாடு முழுவதும் ஸ்டிரைக்...! இந்த கடைகள் எதுவும் இயங்காது... அரிசி ஆலை உரிமையாளர்கள் அறிவிப்பு...!

Fri Jul 15 , 2022
அரிசி மற்றும் உணவு தானியங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து நாளை நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 47வது பொதுக்கூட்டம் சண்டிகரில் கடந்த மாதம் இறுதியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் பிரண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள் போன்ற வேளாண் […]

You May Like