fbpx

The GOAT..!! விஜயுடன் குத்தாட்டம் போட்ட த்ரிஷா.. கேமியோ ரோலில் சிவகார்த்திக்கேயன்..!! ட்விஸ்ட் இருக்கு..

நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினர் உடன் சென்னையில் உள்ள திரையரங்கில் கோட் படம் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின் இன்று வெளியாகியுள்ளது. லைலா, மோகன், ஸ்னேகா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் தி கோட் படத்தில் நடித்துள்ளனர். கோட் படத்தை பார்த்த ரசிகர்கள் பாஸிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றன. 

கோட் படத்தின் முதல் சீனிலேயே விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. கேப்டன் விஜயகாந்த் கோட் சூட்டில் வரும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கேரக்டர் மிகப்பெரிய உற்சாகத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. படத்தில் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன. ‘மட்ட’ பாடலில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா வெறித்தனமாக குத்தாட்டம் போட்டுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்கள் வைரலாகி வருகிறது.

கோட் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமில்லை திரைப்பிரபலங்களும் கண்டு ரசித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் நேற்று இரவே கோட் படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்தாராம். சென்னை அடையாறில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு தன்னுடைய மனைவி சங்கீதா, மகன், மகள் மற்றும் தன்னுடைய பெற்றோர் ஆகியோருடன் வந்து கோட் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் விஜய் கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் சிலரும் அப்போது உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் இன்று காலை கோட் படத்தின் முதல் காட்சியை நடிகை திரிஷா கண்டுகளித்தார். அவர் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் வந்து கோட் படத்தை பார்த்து ரசித்தார். கோட் படத்தில் இடம்பெறும் மட்ட பாடலில் நடிகர் விஜய்யுடன் திரிஷா டான்ஸ் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷும் கோட் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கில் கண்டுகளித்தார்.

Read more ; நீங்கள் BC, MBC-யா? அரசு தரும் ரூ 3 லட்சம் மானியம்..!! எப்படி விண்ணப்பிப்பது?

English Summary

It is said that actor Vijay along with his wife Sangeeta and family enjoyed watching The GOAT at a theater in Chennai.

Next Post

பண்டிகைய கொண்டாடுங்களே.. செப்டம்பர் 17 பொது விடுமுறை..!! தமிழக அரசு அறிவிப்பு..

Thu Sep 5 , 2024
Tamil Nadu Chief Minister Haji has announced that Miladu Nabi, the birthday of the Prophet, will be celebrated on September 17.

You May Like