fbpx

வரும் 21-ம் தேதி வரை கனமழை கொட்டி தீர்க்கும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர், நாமக்கல்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 21-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 22-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 23-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சுயஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

கர்நாடக கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 5௦ கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 6௦ கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இன்று மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

கள்ளக்குறிச்சி கலவரம்..! சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..! டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

Tue Jul 19 , 2022
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் சான்றிதழ்களையும் தீக்கிரையாகின. இதனால், பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் […]
கனியாமூர் கலவரத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு எவ்வளவு..? வெளியானது முழு விவரம்..!

You May Like