திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ”இந்த வழக்கை ஆராய்ந்த போது விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்சனை, சினிமா துறையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி அணுகியுள்ளார். அப்போது, அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளார். சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்த நிலையில், அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அந்த புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள் அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது. இதனால், சீமான் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், இன்று கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் சீமானின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில், சீமான் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால், இன்றைய விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை. வேறு ஒருநாளில் விசாரணைக்கு ஆஜராவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’இந்தி திணிப்பால் தமிழ் அழியாது’..!! ’ஆனால் இது நடக்கும்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் பரபரப்பு பதிவு..!!