திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பங்கேற்றார். கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; மாநிலத்தில் காங்கிரசையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வெற்றிபெறச் செய்வது அவசியம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது என்றார்.
ஆதிர் ரஞ்சனின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தான் இன்னும் வீடியோவைப் பார்க்கவில்லை” என்று கூறினார். இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் குரலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது மட்டுமின்றி அவரை பாஜகவின் பி-டீம் என்று விமர்சனம் செய்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தலில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான் மற்றும் பாஜகவின் நிர்மல் சாஹாவை எதிர்கொள்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.