தமிழ்நாட்டில் ஏராளமான போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், அதுமட்டுமின்றி சேலம், விழுப்புரம், மதுரை, நெல்லை, கோவை ஆகிய கோட்டங்களின் தினந்தோறும் 17,000 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கு இலவச பயணம், மூத்த குடிமக்களுக்கு சலுகை விலையில் பயணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய போக்குவரத்து தொழிலாளர்கள், அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 2023 ஜூன் மாதம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் இதுவரை பண பலன்கள் கிடைக்கவில்லை. தமிழக முழுவதும் சுமார் 3,000 முன்னாள் போக்குவரத்து ஊழியர்களுக்கு பண பலன்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அரசு போக்குவரத்துத்துறை, சேவை துறை என்பதால் நஷ்டம் ஏற்படும் என தெரிந்தும் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இதனால், ஏற்படும் இழப்புகளை அரசுதான் ஈடு கட்ட வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் 15 ஆயிரம் கோடி வைப்புத் தொகையை அரசு செலவு செய்திருப்பதாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 22 மாதங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.3,500 கோடி நிலுவைத் தொகை வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்குவது, அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read More : இடி, மின்னலுடன் வெளுக்கப் போகும் மழை..!! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!