சனி பகவான் கர்மாவின் கடவுள் என்றும் கூறப்படுகிறது. அதன் பொருள், சனி பகவான் அந்த நபரின் செயல்களுக்கு ஏற்ப முடிவுகளை வழங்குகிறார். மேலும், நல்ல செயல்களை செய்பவருக்கு தான் சனிபகவான் அருள் உண்டு. ஆனால், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு யோகம். சனி பகவான் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்யப் போகிறார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் : கடக ராசியைப் பொருத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகாலமக அஷ்டமசனியால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, சனிப்பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி பூரணமாக விலகுகிறது. 27 1/2 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு ஜாக்பாட்தான். தற்போது பாக்கியசனி நடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக துன்பத்தை சந்தித்து வந்தவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். வாங்கிய கடன், வழக்குகள் போன்ற ஒவ்வொரு பிரச்னைகளும் படிப்படியாக தீரும். மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுக்கப் போகிறார் சனி பகவான்.
மகரம் : குருப்பெயர்ச்சியால் கொஞ்சம் தப்பித்திருந்த இந்த ராசிக்காரர்களுக்கு, வரும் ஆண்டு மகத்தான ஆண்டாக அமையும். பூரணமாக ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். 22 1/2 ஆண்டுகளுக்கு இனி இவர்கள் வாழ்வில் யோகம் தான். தொட்ட காரியங்கள் அனைத்திலும் இனி வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். எங்கே அவமானப்பட்டார்களோ, எங்கே தொலைந்தார்களோ அங்கே சாதித்துக் காட்டக்கூடிய காலம் உண்டாகும். விட்டதை பிடிக்க கூடிய காலகட்டம். பொது தளத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள்.
சபையில் இவர்களுடைய குரல் இனி எடுபடும். குழந்தை, பூர்வீக சொத்து, இடம் தொடர்பான விஷயங்களில் கடும் பாதிப்பை சந்தித்து வந்த மகர ராசிக்காரர்களுக்கு இனி நல்ல பலன்கள் கிடைக்கும். மகர ராசிக்காரர்களுக்கு இனி வெற்றிப் பாதைதான். சனி ஆட்சி பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள். ஏழரை சனி நடந்து வந்தாலும் பல்வேறு நன்மைகளையும் சனி பகவான் கட்டாயம் கொடுத்திருப்பார். ஏழரையால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நல்ல பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார். இனி உங்களுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.
ரிஷபம் : ரிஷப ராசிக்கு லாப ஸ்தானத்துக்கு வருகிறார். அதனால், பூர்வ கர்மா உங்களுக்கு கைகொடுக்கும். நல்ல சாதகமான நிலையில் சனி பகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இருப்பதால் அனைத்து நன்மைகளும், நற்பலன்களும் உண்டாகும். தொழில் வளர்ச்சி, லாபம், தந்தை சொத்துகள், பூர்வீக சொத்துகளில் அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணங்கள், உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகல் ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வேலையில் ஸ்டிரெஸ்ஸாக இருந்தவர்களுக்கு இனிமேல் அதிலிருந்து விடுதலை உண்டாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு இருக்கும். நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.
Read more : “நா இல்லாம உங்களால சாதிக்க முடியாது”; சவால் விட்ட செந்தில்; கவுண்டமணி கொடுத்த பதிலடி..