fbpx

ஜெயித்துவிட்டோம் என்று கூறிய ஜடேஜா!… கண்ணீர் ததும்ப தூக்கிவைத்து கொண்டாடிய தல தோனி!… நெகிழ்ச்சி தருணம்!

கடைசி பந்தில் த்ரில்லாக சென்னை அணிக்கு வெற்றிவாகை சூடி தந்த ஜடேஜாவை கண்ணீர் மல்க தோனி தூக்கி வைத்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2023 ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டியில் டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 5வது முறையாக சாம்பியன் கோப்பையை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர், 1 பவுண்டரியை விளாசி அசத்தினார். வின்னிங் ஷாட் அடித்ததும் அவர் நேராக துல்லிக் குதித்தபடியோ கேப்டன் தோனியை நோக்கி ஓடினார். தோனி இந்த ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், அதிருப்தியாக இருந்தார்.

இதையடுத்து, கடைசி பந்தில் ஜெயித்ததை அடுத்து அவரிடம் அருகில் இருந்தவர் ஜெயித்துவிட்டோம் என கூறினார். இதையடுத்து கண்களில் கண்ணீர் ததும்ப அவர் எழுந்த மைதானத்திற்கு வந்தார். அப்போது நேரடியாக ஜடஜோ அவரிடம் வந்து ஜெயித்துவிட்டோம் எனக் கூற, அவரை அப்படியே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த லீக்கில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகே, தோனி களமிறங்குவார். ஆனால், பைனல் ஆட்டத்தில் தோனி முன்கூட்டியே களமிறங்கினார். எப்போதும் ஜடேஜா ஆட்டமிழந்தால் தோனி களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இந்த ஆட்டம் அப்படியே மாறியது. ஜடஜோ ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். போட்டி முடிந்த பிறகு, ரசிகர்களின் அன்பே எங்களை ஜெயிக்க வைத்தது என்றார் ஜடேஜா.

Kokila

Next Post

சிஎஸ்கே வெற்றியை அம்பத்தி ராயுடுவுக்கு அர்ப்பணிக்கிறேன்!... ருதுராஜ் எமோஷனல்!

Tue May 30 , 2023
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பாதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 214 எடுத்து சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது. மழைக்கு பின் தொடங்கிய போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 […]

You May Like