fbpx

வெளியானது ஆதிபுருஷ் படத்தின் “ஜெய் ஸ்ரீராம்” பாடல்…

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ். ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், சைப் அலி கான் ராவணனுக்கும் நடித்துள்ளனர். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆதிபுருஷ் படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது., இதனை கருத்தில் கொண்டு படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்ததால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி படத்தின் ட்ரைலரை மீண்டும் வெளியிட்டது படக்குழு. மேலும் இப்படம் ஜூன் 16ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் “ஜெய் ஸ்ரீராம்” பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபாஸின் கடந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததால், ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Kathir

Next Post

11ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் மாணவர் எடுத்த விபரீத முடிவு….! கதறும் பெற்றோர்கள் சிதம்பரம் அருகே சோகம்….!

Sat May 20 , 2023
எப்போதும் 10 மற்றும் 11, 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது தோல்வி அல்லது குறைந்த அளவிலான மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், நேற்று தமிழ்நாடு முழுவதிலும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது பொது தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அந்த […]

You May Like